தேடல்


6:31
6:31 قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا يٰحَسْرَتَنَا عَلٰى مَا فَرَّطْنَا فِيْهَا ۙ وَهُمْ يَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰى ظُهُوْرِهِمْ‌ؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ‏
قَدْ خَسِرَ நஷ்டமடைந்து விட்டனர் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِلِقَآءِ சந்திப்பை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் حَتّٰٓى முடிவில் اِذَا போது جَآءَتْهُمُ வந்துவிடும் السَّاعَةُ காலம் بَغْتَةً திடீரென قَالُوْا கூறுவர் يٰحَسْرَتَنَا எங்கள் துக்கமே عَلٰى இல் مَا எவை فَرَّطْنَا குறைசெய்தோம் فِيْهَا ۙ அவற்றில் وَهُمْ அவர்களுமோ يَحْمِلُوْنَ சுமப்பார்கள் اَوْزَارَ பாவங்களை هُمْ தங்கள் عَلٰى ظُهُوْرِهِمْ‌ؕ மீது/முதுகுகள்/தங்கள் اَلَا அறிந்து கொள்ளுங்கள் سَآءَ கெட்டுவிட்டது مَا எது يَزِرُوْنَ‏ சுமப்பார்கள்
6:31. ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
6:32
6:32 وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَ مَا الْحَيٰوةُ இல்லை/வாழ்வு الدُّنْيَاۤ உலகம் اِلَّا தவிர لَعِبٌ விளையாட்டு وَّلَهْوٌ‌ ؕ இன்னும் கேளிக்கை وَلَـلدَّارُ வீடுதான் الْاٰخِرَةُ மறுமை خَيْرٌ மிக மேலானது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு يَتَّقُوْنَ‌ؕ அஞ்சுகிறார்கள் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
6:45
6:45 فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْا‌ ؕ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
فَقُطِعَ ஆகவே அறுக்கப்பட்டது دَابِرُ வேர் الْقَوْمِ கூட்டம் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا‌ ؕ அநியாயமிழைத்தனர் وَالْحَمْدُ புகழ் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
6:45. எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”
6:70
6:70 وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ ۢ بِمَا كَسَبَتْ‌ۖ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ‌ ۚ وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا‌ ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا‌ ۚ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَ لِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ‏
وَذَرِ விடுவீராக الَّذِيْنَ எவர்களை اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் دِيْنَهُمْ தங்கள் மார்க்கத்தை لَعِبًا விளையாட்டாக وَّلَهْوًا இன்னும் கேளிக்கையாக وَّغَرَّتْهُمُ இன்னும் மயக்கியது/அவர்களை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَا‌ உலகம் وَ ذَكِّرْ இன்னும் நினைவூட்டுவீராக بِهٖۤ இதன் மூலம் اَنْ تُبْسَلَ ஆபத்திற்குள்ளாகும் نَفْسٌ ۢ ஓர் ஆன்மா بِمَا எதன் காரணமாக كَسَبَتْ‌ۖ செய்தது لَـيْسَ இருக்க மாட்டார் لَهَا அதற்கு مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர وَلِىٌّ பாதுகாவலர் وَّلَا இன்னும் இல்லை شَفِيْعٌ‌ ۚ பரிந்துரையாளர் وَاِنْ تَعْدِلْ அது ஈடுகொடுத்தால் كُلَّ عَدْلٍ எவ்வளவு ஈடு لَّا يُؤْخَذْ ஏற்கப்படாது مِنْهَا‌ ؕ அதனிடமிருந்து اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் اُبْسِلُوْا ஆபத்திற்குள்ளாக்கப் பட்டனர் بِمَا كَسَبُوْا‌ ۚ எதன் காரணமாக/செய்தனர் لَهُمْ இவர்களுக்கு شَرَابٌ குடிபானமும் مِّنْ இருந்து حَمِيْمٍ கொதி நீர் وَّعَذَابٌ வேதனை اَ لِيْمٌۢ துன்புறுத்தக்கூடியது بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْفُرُوْنَ‏ நிராகரிக்கிறார்கள்
6:70. (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
6:86
6:86 وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا‌ ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை وَالْيَسَعَ இன்னும் அல்யஸஉவை وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَلُوْطًا‌ ؕ இன்னும் லூத்தை وَكُلًّا எல்லோரையும் فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
6:86. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
6:90
6:90 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ‌ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ ‌ؕ قُلْ لَّاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا‌ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் هَدَى நேர்வழி செலுத்தினான் اللّٰهُ‌ அல்லாஹ் فَبِهُدٰٮهُمُ ஆகவே அவர்களுடைய நேர்வழியைக் கொண்டே اقْتَدِهْ ؕ பின்பற்றுவீராக / அதை قُلْ கூறுவீராக لَّاۤ மாட்டேன் اَسْـٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்க عَلَيْهِ இதற்காக اَجْرًا‌ ؕ ஒரு கூலியை اِنْ இல்லை هُوَ இது اِلَّا தவிர ذِكْرٰى நல்லுபதேசம் لِلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
6:90. இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக; “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.
6:130
6:130 يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ؕ قَالُوْا شَهِدْنَا عَلٰٓى اَنْفُسِنَا‌ وَغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏
يٰمَعْشَرَ கூட்டமே الْجِنِّ ஜின்களின் وَالْاِنْسِ மற்றும் மனிதர்கள் اَلَمْ يَاْتِكُمْ உங்களிடம் வரவில்லையா? رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களிலிருந்து يَقُصُّوْنَ விவரிப்பவர்களாக عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِىْ என் வசனங்களை وَيُنْذِرُوْنَكُمْ இன்னும் எச்சரிப்பவர்களாக/உங்களுக்கு لِقَآءَ சந்திப்பை يَوْمِكُمْ உங்கள் நாள் هٰذَا‌ ؕ இது قَالُوْا கூறுவார்கள் شَهِدْنَا சாட்சியளித்தோம் عَلٰٓى எதிராக اَنْفُسِنَا‌ எங்களுக்கு وَغَرَّتْهُمُ மயக்கி விட்டது/அவர்களை الْحَيٰوةُ வாழ்வு الدُّنْيَا உலகம் وَشَهِدُوْا இன்னும் சாட்சி கூறுவார்கள் عَلٰٓى எதிராக اَنْفُسِهِمْ அவர்களுக்கு اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் كٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களாக
6:130. (மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
7:10
7:10 وَلَقَدْ مَكَّـنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக مَكَّـنّٰكُمْ இடமளித்தோம்/உங்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் مَعَايِشَ ؕ வாழ்வாதாரங்களை قَلِيْلًا مَّا மிகக் குறைவாக تَشْكُرُوْنَ‏ நன்றி செலுத்துகிறீர்கள்
7:10. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.  
7:32
7:32 قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِ‌ؕ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِ‌ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
قُلْ கூறுவீராக مَنْ எவன்? حَرَّمَ தடை செய்தான் زِيْنَةَ அலங்காரத்தை اللّٰهِ அல்லாஹ் الَّتِىْۤ எது اَخْرَجَ வெளிப்படுத்தினான் لِعِبَادِهٖ தன் அடியார்களுக்காக وَالطَّيِّبٰتِ இன்னும் நல்லவற்றை مِنَ الرِّزْقِ‌ؕ உணவில் قُلْ கூறுவீராக هِىَ அது لِلَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا இவ்வுலகம் خَالِصَةً பிரத்தியோகமாக يَّوْمَ الْقِيٰمَةِ‌ؕ மறுமை நாளில் كَذٰلِكَ இவ்வாறு نُفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ‏ அறிகின்றார்கள்
7:32. (நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
7:35
7:35 يٰبَنِىْۤ اٰدَمَ اِمَّا يَاْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْ‌ۙ فَمَنِ اتَّقٰى وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளே اِمَّا يَاْتِيَنَّكُمْ நிச்சயமாக வந்தால் / உங்களிடம் رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களில் இருந்தே يَقُصُّوْنَ விவரித்தவர்களாக عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِىْ‌ۙ என் வசனங்களை فَمَنِ எவர்(கள்) اتَّقٰى அஞ்சினார்(கள்) وَاَصْلَحَ இன்னும் சீர்திருத்தினார்(கள்) فَلَا خَوْفٌ பயமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏ அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
7:35. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.